Sunday , March 29 2020

கருணாநிதி மீண்டும் காந்த குரலோடு மக்களை சந்திப்பார்: வைகோ

vaiko-stalin1

திமுக தலைவர் கருணாநிதி மிக நலமுடன் இருப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ‘திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில், வயது காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் அவரைக் கவனித்து வருகின்றனர் ’ என்று காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.  இதனால், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்து அவருடைய உடல் நலம் குறித்து கேட்டறிந்து செல்கின்றனர். திமுக தொண்டர்களும் தொடர்ந்து …

Read More »

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி கேரள முதல்வர் பினராய் விஜயனுடன் வைகோ சந்திப்பு

Vaiko-prnai

நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேரள முதல்வர் பினராய் விஜயனை இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “கேரள முதல்வர் பினராய் விஜயனை கேரள அரசு தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.  தேனி மாவட்டம், பொட்டிப்புரம் அம்பரப்பர் மலையில் மத்திய அரசு அமைக்க முனைந்துள்ள நியூட்ரினோ ஆய்வகம் தமிழ்நாட்டுக்கும், …

Read More »

ஸ்டாலினை விமர்சனம் செய்யக்கூடாது: மதிமுகவினருக்கு வைகோ எச்சரிக்கை

Vaiko-stalin

  மதிமுக தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ ஸ்டாலின் குறித்து எந்த விமர்சனமும் செய்யக்கூடாது என்று வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”திமுக குறித்தோ, அதன் செயல் தலைவரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆருயிர் சகோதரர் மு.க.ஸ்டாலின் குறித்தோ, மதிமுக தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது.   அப்படிச் செய்பவர்கள் மதிமுக …

Read More »

பேரிடர் மேலாண்மையில் முறையற்ற பயிற்சி; கடும் நடவடிக்கை தேவை: வைகோ

vaiko3

பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் முறையற்ற பயிற்சிகள் நடைபெறுவதைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக  அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கோவை மாவட்டம் வெள்ளிமலைப்பட்டினம் தனியார் கல்லூரியில், பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் நடந்த முறையற்ற பயிற்சிகளின் விளைவாக, மாணவி லோகேஸ்வரி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எந்தவிதப் பயிற்சிகளும் பெறாத …

Read More »

வைகோ மீது வழக்கு; கோர்ட் உத்தரவு

vaiko1

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வக்கீல் தாக்கப்பட்ட சம்பவத்தில் வைகோ மீது வழக்கு பதிவு செய்ய  போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலைய துவக்க விழாவிற்கு வந்த பிரணாப் முகர்ஜிக்கு வைகோ உள்ளிட்டோர் கருப்புக்கொடி காட்டிய வழக்கு விசாரணை, தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராக கடந்த 6ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தூத்துக்குடி  வந்தார். அப்போது சில வக்கீல்கள் அவரை …

Read More »

மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழிக்கும் தமிழக அரசு:

vaiko21

மூலக்கொத்தளம் மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தை அழித்து குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ  வெளியிட்ட அறிக்கையில், “சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், 20 ஏக்கர் பரப்பில் உள்ள மயானத்தில், உயிர் இழந்தோரின் உடல்கள், கடந்த 120 ஆண்டுகளாக எரிக்கப்பட்டும், புதைக்கப்பட்டும் வருகின்றது. மொழியின் தனித்தன்மையை, உரிமையைப் பாதுகாக்கவும், சமூக நீதியைக் காக்கவும், சமதர்ம …

Read More »

சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பாஜக அரசு செய்கிறது

vaiko1

ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் எந்த நிலையிலும் மருத்துவக் கல்வி பெற்றுவிடக்கூடாது என்று சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலையை மத்திய பாஜக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவது கடுமையான கண்டனத்துக்கு உரியதாகும். மாநில உரிமைகளை காலில்போட்டு மிதித்து கூட்டாட்சி கோட்பாட்டையே சிதைத்து வரும் மத்திய பாஜக அரசிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம், ஒரே வரி மற்றும் ஒரே நுழைவுத் தேர்வு …

Read More »

கணினி வழியில் நீட் தேர்வு; மத்திய அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துக் கொள்கிறது

vaiko

நீட் நுழைவுத்தேர்வு கணினி வழித் தேர்வாக நடத்தப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளது, சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் வேலை என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ  வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் முறையைத் திணித்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறித்துக்கொண்ட மத்திய பாஜக அரசு, அடுத்தடுத்து கொண்டு வரும் திட்டங்கள் எதேச்சதிகாரமானதாக …

Read More »

’இம்’ என்றால் சிறைவாசம்

sterlite14

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் சென்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது, ஒரு பழைய வழக்கில் கைது செய்து, இரக்கம் இல்லாமல் துன்புறுத்திச் சிறையில் அடைத்தனர். எட்டு வழிப் பாதை குறித்து, சமூக வலைதளங்களில் கருத்துக்கூறிய ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வசீகரனை, சேலம் மாவட்ட காவல்துறையினர், சென்னை மதுரவாயல் வீட்டில் நள்ளிரவில் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ’இம்’ என்றால் சிறைவாசம் என்ற …

Read More »

அதிகார மமதையில் அடக்குமுறையை கையாள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்

vaiko1

தமிழக அரசு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை இருப்பதை போன்று அதிகார மமதையில் அடக்குமுறையை கையாள்வதாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்களைக் காக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளைத் தடுக்கவும், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாக்கவும் போராடுகின்றவர்களை, தேசப் பாதுகாப்புச் சட்டம், தேசத்துரோகக் குற்றச்சாட்டு, குண்டர் சட்டம் ஆகிய கொடிய அடக்குமுறைச் சட்டங்களில் வழக்குப் பதிவு செய்து, அறவழிப் போராட்டக்காரர்களையும் சிறையில் அடைத்துத் துன்புறுத்துவது, தமிழக …

Read More »