Sunday , March 29 2020

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தமிழக நீதிபதியை நியமிக்கக் கூடாது; பசுமைத் தீர்ப்பாயத்தில் நிர்வாகம் வாதம்: வைகோ எதிர்ப்பு

vaiko4

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த நீதிபதியையும் நியமிக்கக் கூடாது என நிர்வாகம் தரப்பில் கோரப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த வழக்கு, டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற …

Read More »

பொதுமக்களின் பாதிப்புகளை உணர்ந்து உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்

vaiko1

உள்ளாட்சி நிர்வாகம் செயல்படாவிட்டால் பாதிப்பு மக்களுக்குதான். இதை உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்’ என்று வைகோ வலியுறுத்தி உள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை பீளமேடு விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக முப்பெரும் விழா மாநாடு ஈரோட்டில் கலைஞர் மைதானத்தில் வரும் செப்டம்பர் 15ம்தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணா, பெரியார் பிறந்தநாள் விழா, மதிமுக வெள்ளிவிழா, எனது பொதுவாழ்வின் பொன்விழா ஆகிய …

Read More »

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் முறையாக நடத்தப்படவில்லை: வைகோ கண்டனம்

vaiko12

  ஆளுநர் மாளிகையில் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் நீதியரசர்கள் முறையாக நடத்தப்படாததற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நீதியரசி தகில் ரமணி பதவிப் பிரமாணம் மேற்கொண்ட நிகழ்ச்சியின் போது, இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறை மதிப்பு வரிசைப்படி உயர் நீதிமன்ற …

Read More »

இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை தேவை: வைகோ

vaiko211

  இலங்கை கடற்படை கைது செய்துள்ள 27 தமிழக மீனவர்களை விடுதலை செய்வதுடன், அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப்பெற மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ராமநாதபுரம் மாவட்டம் – நம்புதாளை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் – ஜெகதாபட்டினம் அருகில் உள்ள ரம்பவயல் கிராமத்தில் தங்கி, …

Read More »

தமிழர்களின் சகாப்த நாயகர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்குக: வைகோ

vaiko-with-mk

  மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்கூறும் நல்லுலகின் தன்னிகரில்லா மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களைத் துயர் கொள்ளச் செய்துவிட்டு, அண்ணாவுக்கு அருகில் துயில் கொள்ளச் சென்றுவிட்டார்.  ஐம்பது ஆண்டு காலம் திராவிட இயக்கத்துக்கு தலைமையேற்று வழிநடத்திய கலங்கரை …

Read More »

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி வைகோ தொடர்ந்த வழக்கில் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

vaiko4

  விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு இந்தியாவில் விதிக் கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கின் விசாரணை வரும் 14-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும் புதூரில் படுகொலை செய்யப் பட்டார். அதன்பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க …

Read More »

பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா; வரலாற்றை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசு: வைகோ குற்றச்சாட்டு

vaiko

  பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு சட்டத்தைத் திருத்துவதன் மூலம் மத்திய அரசு அச்சட்டத்தை இந்துத்துவத்திற்கு ஆதரவாகவே பயன்படுத்திக் கொள்ளும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “கல்வி, சுற்றுச்சூழல், சமூக நீதி, நிதி, தற்சார்பு போன்ற பல்வேறு தளங்களில் முதலாளித்துவத்திற்கும், இந்துத்துவத்திற்கும் ஆதரவாக பல்வேறு சட்டத் திருத்தங்களைக் கொண்டு வந்து, அச்சட்டங்கள் இயற்றப்பட்டதற்கான நோக்கத்தையே நீர்த்துப் போகச் செய்வதற்கான பல்வேறு …

Read More »

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சதி வலை; திராவிட இயக்கத்தின் சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்றுக: வைகோ

Vaiko1

தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சதி வலை; திராவிட இயக்கத்தின் சமூக நீதிச் சுடரை அணையாமல் காப்பாற்றுக: வைகோ தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரான சதி வலைகளை அறுத்து எறியும் வகையில் தமிழக அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு …

Read More »

சிலை திருட்டு விவகாரம்; விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலை மாற்றத் துடிப்பது ஏன்?- வைகோ

Vaiko1

சிலை திருட்டு விசாரணை காவல்துறை அதிகாரியை தமிழக அரசு மாற்றத் துடிப்பது ஏன் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழக மன்னர்கள் கட்டி எழுப்பிய கோயில்களில் மிகப் பழமையான, விலைமதிக்க முடியாத வெண்கலச் சிலைகளும், கற்சிலைகளும் தமிழகமெங்கும் உள்ளன. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்திலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும் உள்ள சிலை கடத்துகின்ற கொள்ளைக்காரர்கள் …

Read More »

திமுக தலைவர் கருணாநிதி பூரண நலம் பெற்று திரும்பி வருவார் – வைகோ

vaiko-stalin1

தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவருக்கு திடீரென்று ரத்த அழுத்த குறைபாடு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கருணாநிதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனையின் 4-வது மாடியில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில், 8 டாக்டர்கள் அடங்கிய குழுவினர் அவருக்கு …

Read More »